POST 6

உங்களது முதல் பத்து ஆசைகளை கனவுகளை பட்டியலிடுங்கள். வரிசை எண் கொடுங்கள். ஒவ்வொரு ஆசைக்கும் நேராக மூன்று குணங்களை அடிப்படையாக வைத்து அவற்றிற்கு மதிப்பெண் கொடுங்கள். அந்த ஆசை எவ்வளவு தீவிரமானது.

அந்த ஆசைக்காக நீங்கள் எவ்வளவு தூரம் முயற்சித்து உள்ளீர்கள் ?

அந்த ஆசையை கைவிடாமல் எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து முயன்று வந்திருக்கிறீர்கள்.

உதாரணமாக நீங்கள் தொழில் முனைவோராக ஆசைப்பட்டு இருக்கலாம்.

அந்த ஆசை எவ்வளவு தீவிரமானது,

மேம்போக்கானதா அல்லது ஆழமானதா.

ஒரு தொழில் முனைவோர் ஆவதற்கு என்ன என்ன திறமைகள் தேவை அது பற்றிய தகவல்கள் திரட்டி இருக்கிறீர்களா

இப்படிப்பட்ட கேள்விகளை வைத்து நீங்கள் ஆசையின் தீவிரத்தை அளக்கலாம் மற்ற தொழிலதிபர்களை பார்த்து வெறுமனே நானும் தொழில் ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இருந்தால் வெறும் நான்கு மதிப்பெண்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள். அல்லது தேவையான தகுதிகள், பண்புகள் உங்களுக்கு இருப்பதாக நினைத்தால் ஐந்து அல்லது ஆறு மதிப்பெண்கள் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் ஆசை உண்மையானது தான என்று சந்தேகம் இருந்தால் ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது மூன்று மதிப்பெண்கள் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் ஆசையை அடைய எத்தனை முறை முயன்று உள்ளீர்கள் என்பதற்கு அத்தனை மதிப்பெண்கள் போட்டு கொள்ளுங்கள். எத்தனை வருடங்கள் முயன்று உள்ளீர்களாளோ அத்தனை மதிப்பெண்கள் போட்டுக்கொள்ளுங்கள். முயற்சி செய்த வருடங்கள் தான். ஆசைப்பட்ட வருடங்கள் அல்ல. 25 வருடம் ஆசைப்பட்டதற்காக பத்து மதிப்பெண் கொடுக்க கூடாது. ஐந்து முறை முயற்சி செய்திருந்தால் ஐந்து மதிப்பெண் கொடுத்து கொள்ளுங்கள். முயற்சி எடுக்க ஆரம்பித்த பின் நடுவில் சில வருடங்கள் முயற்சி எடுக்காமல் மீண்டும் ஒரு வருடம் முயற்சி எடுத்திருந்தால் நடுப்பாட்ட வருடங்களையும் கூட்டி கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் தீவிரம், எத்தனையே தடவை முயற்சி, எத்தனை வருடம் முயற்சி என்பதை கூட்டி கொள்ளுங்கள். மூன்றால் வகுத்து கொள்ளுங்கள். கிடைக்கும் நம்பர் ஆருக்கு மேல் இருந்தால் அந்த ஆசை நிறைவேறக்கூடியதாக எடுத்துக்கொள்ளலாம். மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்

Comments

Popular posts from this blog

POST 7

POST 2