POST 1
அனைவருக்கும் வாழ்க்கையில் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்ற ஆசை
இருக்கும். நிறைய பேருக்கு செல்வந்தர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு
உறவில் பற்றியும் சிலருக்கு ஆரோக்கியம் பற்றியும் இருக்கும். சிலர் வீடு வாங்க
அல்லது கார் வாங்க ஆசை கொள்ளலாம். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த ஆசை
எப்பொழுதாவது வந்து போகிறதா அல்லது அடிக்கடி வந்து போகிறதா என்று பாருங்கள்.
ஏனெனில் உங்கள் ஆசை கொழுந்து விட்டு எரிய வேண்டும். உங்களை தூங்கவிடாமல் பண்ண
வேண்டும். அதை எப்படியாவது அடைய வேண்டுமே என்ற எண்ணம் உங்களை தூங்க விட கூடாது.
அப்படி வரவில்லை என்றால் உங்கள் ஆசைக்கு அதிக சக்தி இல்லாமல் இருக்கிறது.
மேலோட்டமாக இருக்கிறது. நம்மிடம் இருப்பது வெறும் ஆசை தான். அது இலக்கு அல்ல.
இலக்காக வைத்து முயலும் பொழுது தான் அவை உண்மையிலேயே நடக்க ஆரம்பிக்கின்றன. சரி
ஆசைக்கும் இலக்கிற்கும் என்ன வித்தியாசம் ? ஒரு விருப்பத்திற்கும் இலக்கிற்கும்
இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் கட்டமைப்பு, செயல்படும் திறன் மற்றும்
அர்ப்பணிப்பு ஆகியவற்றில் உள்ளது. ஆசை என்பது நீங்கள் எதிர்பார்க்கும் ஒன்று; ஒரு
இலக்கு என்பது நீங்கள் உழைக்கும் ஒன்று. விருப்பங்களை இலக்குகளாக மாற்றுவது
தெளிவைச் சேர்ப்பது, ஒரு திட்டத்தை உருவாக்குவது மற்றும் செயலில் ஈடுபடுவது ஆகியவை
அடங்கும்.
Comments
Post a Comment